முகப்பு
கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: கவிஞர். இரா .இரவி

Updated On : 27 மார்ச் 2017, 5:08 pm IST
பகிர்:

ஆறோடும் நீரோடும் போராடியே உழவர்களின் 
ஆருயிர் பிரிந்து வருவது வேதனை வெட்கம் !

ஆற்றில் வெள்ளம் வருகின்றது சிலநேரம் 
ஆற்றுப்படுத்திச்  சேமிக்க வழி இல்லை !

ஆற்றுமணல் கொள்ளை நிறுத்தப்பட வேண்டும் 
அந்நியர் குளிர்பானக்  கொள்ளை ஒழிக்க  வேண்டும் !

Advertisement

Advertisement

விவசாயத்தின் உயிர் மூச்சு  தண்ணீர் என்பதால் 
விவசாயம் பொய்த்திட மூச்சை விடுகிறான் விவசாயி !

உயிர் வாழ உணவு வேண்டும் உணருங்கள் 
உணவு வழங்க உழவன் உயிர் வாழ வேண்டும் !

விவசாயிகளின் எண்னிக்கை குறைவது இழுக்கு 
விவசாயம் பெருகினால்தான் நாடு செழிக்கும் !  

உழவுத் தொழிலே சிறந்தது என்று அன்றே
உரைத்தார் உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் !

இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று 
அன்றே உரைத்தார் உத்தமர் காந்தியடிகள் !

முதுகெலும்பை முறிக்கும்படி  விவசாயத்தை 
மண்ணில் அழித்து வருகின்றனர் சிலர் !

விவசாயம் வாழ விவசாயி வாழ சிந்தியுங்கள் 
விவேகமாக திட்டங்கள் தீட்டி செயல்படுத்துங்கள் !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னால்  
கண்டுகொள்ளாமல் இருப்பது முறையோ ?சரியோ ?

காவிரி மேலாண்மை வாரியம் நியமித்தால் 
காவிரிக்காகச் சண்டைப் போட அவசியம் இல்லை !

வருடா வருடம் கருநாடகத்திடம் கெஞ்ச வேண்டாம் 
வருடா வருடம் கருநாடகம்  மிஞ்ச வேண்டாம் !

பகிர்ந்து உண்டு வாழ வழி செய்திட வேண்டும் 
பகிர்தலில்  நல்ல நியாயம் இருக்க வேண்டும் !

முல்லை பெரியாறு நீர் உயர்த்திட வேண்டும் 
முரண்டு பிடிக்கும் கேரளா திருந்திட விடும் !

புதிதாக யாரும் இனி அணை கட்டக்கூடாது 
பழைய அணைகளை பராமரித்தாலே போதும் !

உணவு வழங்கிடும் உழவன் தண்ணீரின்றி
உயிர் விடுவது உலகிற்கு அவமானம் ! வெட்கம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments