டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ. 95.61 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ. 95.61 ஆக நிலைபெற்றது.
மும்பை: உள்நாட்டுப் பங்குச் சந்தைகளின் பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ. 95.61 ஆக நிலைபெற்றது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள தாமதம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்குக் கிடைத்து வரும் ஆதரவு உள்ளிட்டவையால், ரூபாய் - டாலர் வர்த்தகம் சரிவுப் போக்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 95.50 ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தின்போது ரூபாயின் மதிப்பு ரூ. 95.49 முதல் ரூ. 95.62 என்ற வரம்பில் வர்த்தகமானது. முடிவில், முந்தைய நாள் முடிவு நிலையிலிருந்து 19 காசுகள் சரிந்து ரூ. 95.61 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவடைந்தது.
The rupee depreciated 19 paise to close at 95.61 against the US dollar on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.