அன்றில் பறவைகள் ஒன்றாய் திரியும் !ஒன்று பிரிந்தாலும் ஒன்றுயிர் பிரியும் !உறவின் வலிமைகள் அழகாய்ச் சொல்லும் !பறவை மனமன்பின் உருவாய்த் திகழும் !கிடைத்த உணவதனைக் கரைந்தே உண்ணும் !அடைத்து தனக்கென்று வைத்தாக் கொள்ளும்?காகம் கூட்டமுடன் பகிர்ந்தே தின்னும் !பாடம் நமக்கானால் நலமே திண்ணம் !குருவி தனக்கென்று கூட்டைக் கட்டும் !நழுவி அதுவீழ்ந்தால் மீண்டும் கட்டும் !முயற்சி விடாது மீண்டும் மீண்டும்...முயலும் நம்பிக்கை அதுவே வேண்டும் !பறந்து மரந்தேடி கிளையில் அமரும் !முறிந்து கிளைவீழ்ந்தால் என்ன வாகும்?கிளையின் வலுவறிந்தா அங்கே அமரும்?விரிக்க சிறகிருக்கு தன்பலம் அறியும்...!அதோ அந்த பறவை போல மனசு வேண்டும் !இதோ இந்த மனிதர்மனம் மாற வேண்டும் !