வீணையின் நாதம்: பி.பிரசாத்
இசைக்கருவி பலஉண்டு அதற்கெல்லாம் மகராணி... வீணையெனும் வாத்தியமே ஏந்திடுவாள் கலைவாணி !அசையாத மனம்கூட அசைத்திடுமே அதன்நாதம் ! இனியஒலி யாவைக்கும் அதன்ஒலியே உவமானம் !கடலோர மண்ணுக்கு பாய்ந்துவரும் அலையோசை... காதல்மதி கொண்டோர்க்கு கன்னியளின் வளையோசை...மடல்பூக்கும் மலருக்கு தென்றல்தரும் முத்தஒலி... நடமாடும் மயிலுக்கு மழைஇடியின் சத்தஒலி...அன்பான அன்னைக்கு தன்பிள்ளை மொழிமழலை... கவிபாடித் திரிவோர்க்கு செந்தமிழின் வார்த்தையலை...ஒன்றாகச் சேர்ந்தோர்க்கு ஆனந்த சிரிப்பொலியாம்.. இறைதேடும் பக்தர்க்கு ஆலயத்தின் மணியொலியாம் !இருக்கின்ற நிலைபொருத்து கேட்கின்ற ஓசையது.. இனிதெனவே ஆகிடுமே...வீணையதன் நாதமென...நறுக்கென்று எந்நாளும் நன்மொழியே பேசிடுவோம்..! நாதமென அம்மொழிகள் ரீங்காரம் செய்திடுமே !
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.