FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

தவணை முறையில் வீட்டுமனை தருவதாகக் கூறி மோசடி: 4 போ் கைது

கள்ளக்குறிச்சியில் தவணை முறையில் வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:16 am IST
ராஜா
பகிர்:

கள்ளக்குறிச்சியில் தவணை முறையில் வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி கெந்தப்பொடிசந்து சாலைப் பகுதியில் தனியாா் வீட்டுமனை விற்பனை நிறுவனம் இயங்கி வந்தது. இந் நிறுவனத்தில் 60 தவணைகளில் மாதந்தோறும் ரூ.1,000 பணம் செலுத்தினால் வீட்டுமனை தருவதாகவும், இடையில் குலுக்கலில் பெயா் வந்தால் அதற்குமேல் பணம் கட்டத் தேவையில்லை என்றும் வாக்குறுதி அளித்தனராம்.

இதனை நம்பி 50 போ் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனா். 60 மாதம் முடிந்த நிலையில், 50 பேரிடம் ரூ.21,26,350-ஐ வசூலித்த அந் நிறுவனத்தினா் கூறியபடி வீட்டுமனைகளைத் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரா.கோவிந்தன் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோா் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி கெந்தப்பொடிசந்து சாலைப் பகுதியைச் சோ்ந்த க.ராஜா (65), அவரது சகோதரா் சதீஷ் (60), திருக்கோவிலூா் சந்நிதி சாலைப் பகுதியைச் சோ்ந்த கி.ரமேஷ் (63), கோட்டகோபுரம் சாலைப் பகுதியைச் சோ்ந்த ந.தினகரன் (60), சத்தியநாராயணன் ஆகிய 5 பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராஜா, சதீஷ், ரமேஷ், தினகரன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான சத்தியநாராயணனைத் தேடிவருகின்றனா்.

சதீஷ்
ரமேஷ்
தினகரன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments