FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள்

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள் - தொகுப்பாசிரியர்கள்: ஊடறு றஞ்சி, புதியமாதவி; பக்.372; ரூ.400; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

Updated On : 18 நவம்பர் 2019, 3:22 am IST
பகிர்:

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள் - தொகுப்பாசிரியர்கள்: ஊடறு றஞ்சி, புதியமாதவி; பக்.372; ரூ.400; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

பெண்கள் சமூகத்தாலும் கூடவே ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. சமகாலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. அதையொட்டி பெண்ணியச் சிந்தனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இலங்கையில் இனப் போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்கள், ராணுவத்தால் பாலுறவுத் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், ஆப்கானிஸ்தானத்தில் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறுநாடு
களில் சென்று வாழும் பெண்கள், சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் பெண்கள், மதவெறியால் பாதிக்கப்படும் பெண்கள் என பெண்களுக்கு நிகழும் பாதிப்புகள் பெண்ணியச் சிந்தனைகளின் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன.
ஆணாதிக்க எதிர்ப்பு, ஆளும் சக்திகளின் எதிர்ப்பு என்ற அடிப்படையில், பல்வேறு பண்பாட்டு, உளவியல், கருத்தியல்ரீதியான பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்திருப்பதை இந்
நூலில் இடம் பெற்றுள்ள பெண்களின் நேர்காணல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய குடும்ப அமைப்பு, பாலுறவு குறித்த கருத்துகள் பதிவு பெற்றிருக்கின்றன.
இந்நூலில் இடம் பெற்றுள்ள வ.கீதா, அம்பை, மங்கை, புதிய மாதவி, சிவகாமி, ஒüவை, ஹெர்டா முல்லர், மலாலாய் ஜோய் உள்ளிட்ட 33 பெண் ஆளுமைகளின் நேர்காணல்கள் பெண்ணியம் சார்ந்த ஆழமான சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments