FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவா அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணித்த கோவா எப்.சி. அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம்

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணித்த கோவா எப்.சி. அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை 10 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
 கடந்த டிசம்பரில் நடந்த ஐஎஸ்எல் இறுதி ஆட்டத்தில் கோவா 2-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியிடம் தோல்வி கண்டது.
 வெற்றி கொண்டாட்டத்தின்போது தங்கள் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான தத்தாராஜ் சல்கோகரை சென்னை வீரர் இலானோ தாக்கியதாகக் கூறி கோவா அணியினர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. இலானோ மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
 இந்த விவகாரத்தை விசாரித்த அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு, கோவா அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அணியை தவறாக வழிநடத்தியது, மோசமாக நடந்துகொண்டது, மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments