சந்தோஷ் டிராபி: அரையிறுதியில் மகாராஷ்டிரம்
70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மகாராஷ்டிர அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மகாராஷ்டிர அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நாகபுரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 1-0 என்ற கோல் கணக்கில் மிúஸாரமை வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்த மகாராஷ்டிரம் அரையிறுதியை உறுதி செய்துள்ளது. அந்த அணியின் தரப்பில் சபேஷ் பதான் 66-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் மகாராஷ்டிர கோல் கீப்பர் ஓவைஸ் கான் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சர்வீசஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ரயில்வே அணியைத் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டங்கள்
தமிழகம்-கோவா
அஸ்ஸாம்-பஞ்சாப்
போட்டி நேரம்: பிற்பகல் 3.30
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.