விடைபெற்றார் சுனில் சேத்ரி..!
19 ஆண்டுகள் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடி வந்த சுனில் சேத்ரி ஓய்வு பெற்றுள்ளார்.
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்துடன், தான் ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, கொல்கத்தாவில் இன்று( ஜூன் 6) நடைபெற்ற குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டம் சுனில் சேத்ரியின் கடைசி சர்வதேச கால்பந்து ஆட்டமாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக 151 போட்டிகளில்(கடைசி ஆட்டத்தையும் சேர்த்து) விளையாடியுள்ள 39 வயதாகும் சுனில் சேத்ரி, மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம், உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காமிடத்தில் சுனில் சேத்ரி இருக்கிறார்.
இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ(128), ஈரானின் அலி டேய்(108) மற்றும் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி(106) ஆகியோர் உள்ளனர்.
ஓய்வு பெற்ற சுனில் சேத்ரிக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுனில் சேத்ரியின் கடைசி சர்வதேச கால்பந்து ஆட்டம் கொல்கத்தாவின் சால்ட் லேக் திடலில் நடைபெற்றது. இதை நேரில் காண 50,000க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அவர் கண்ணீர் மல்க கால்பந்து திடலை விட்டு விலகும் விடியோவை எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது இந்திய கால்பந்து அணி நிர்வாகம்.
இந்த விடியோ கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பாரவையாளர்களையும் நெகிழச்செய்துள்ளது.