இந்திய அணிக்கு எதிராக எங்களது சிறந்த வெற்றி இதுதான்: வில் யங்
நான்காவது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியே இந்திய அணிக்கு எதிராக தாங்கள் பெற்ற சிறந்த வெற்றி என நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் தெரிவித்துள்ளார்.
நான்காவது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியே இந்திய அணிக்கு எதிராக தாங்கள் பெற்ற சிறந்த வெற்றி என நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பே ஓவலில் நேற்று (நவம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 244 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 333 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் வில் யங் சதம் விளாசி அசத்தினார். அவர் 108 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், விளையாடிய இந்திய அணி 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி பெற்ற வெற்றிகளிலேயே மிகவும் சிறந்த வெற்றி இது எனவும், கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வோம் எனவும் வில் யங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு எதிராக எங்களது சிறந்த வெற்றிகளில் ஒன்றாக இதனைக் கூறுவேன். நாங்கள் ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடினோம். எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. நியூசிலாந்து அணிக்கு சிறிது அதிர்ஷ்டமும் இருந்தது. முதல் இரண்டு போட்டிகளைக் காட்டிலும் ஆடுகளம் நன்றாக இருந்ததாக உணர்ந்தோம். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தோம் என்றார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (நவம்பர் 15) ஓவலில் நடைபெறுகிறது.