FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

அங்குஷ் பங்கால் அசத்தல்.. குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7-ஆவது தங்கம்!

காமன்வெல்த்தில் அங்குஷ் பங்காலின் அசத்தலான ஆட்டத்தால் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 10:48 am IST
அங்குஷ் பங்கால் - லவ்லினா.
பகிர்:

கிளாஸ்கோ காமன்வெல்த்தில் அங்குஷ் பங்காலின் அசத்தலான ஆட்டத்தால் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் தடகளம், குத்துச்சண்டை, ஜூடோ என அசத்தி வருகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் குத்துச் சண்டை போட்டியில் 10 பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தனர். இந்த நிலையில், 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எம்மா-சூ கிரீன்ட்ரீயை லவ்லினா போர்கோஹைன் எதிர்கொண்டார்.

Advertisement

Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா, எம்மா-சூவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

அவரைத் தொடர்ந்து 80 கிலோ எடைப் பிரிவில், இங்கிலாந்தின் டிமேஜி ஷிட்டுவை இந்திய வீரர் அங்குஷ் பங்கால் எதிர்கொண்டார். டிமேஜி ஷிட்டுவை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வீழ்த்தி அங்குஷ் பங்கால், தங்கப்பதக்கத்தைத் தனதாக்கினார்.

90 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

இதன்மூலம், குத்துச்சண்டைப் போட்டிகளில் சச்சின், அங்குஷ், சாக்‌ஷி, ப்ரீத்தி, ஜாஸ்மின், பிரியா, லவ்லினா என மொத்தமாக 7 தங்கப்பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. மேலும், மொத்தமாக 39 பதக்கங்களை வென்று 4-ஆவது இடத்தில் தொடர்கிறது.

summary

India's Ankush Panghal produced one of the biggest comebacks of the Commonwealth Games 2026 boxing competition, recovering from a 5-0 deficit after the opening round to defeat England's Dimeji Shittu and win the men's 80kg gold medal on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments