FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

திவ்யா தேஷ்முக் உள்பட 17 விளையாட்டு நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது!

திவ்யா தேஷ்முக் உள்பட 17 விளையாட்டு நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:58 pm IST
திவ்யா தேஷ்முக்.
பகிர்:

செஸ் நட்சத்திரம் திவ்யா தேஷ்முக், தேஜஸ்வின் சங்கர் மற்றும் காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்துள்ளது.

இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதும் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான விளையாட்டு விருதுகளை ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் விருதுகளுக்கான பெயர்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் செவ்வாக்கிழமை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு செஸ் நட்சத்திரம் திவ்யா தேஷ்முக், டெகாத்லான் வீரர் தேஜஸ்வின் சங்கர் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை காயத்ரி கோபிசந்த் கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தி, மகளிர் இரட்டையர் பிரிவில் மற்றொரு வீராங்கனை ட்ரீசா ஜாலி, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் நரேந்தர் மற்றும் காதுகேளாத துப்பாக்கிச் சுடும் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அர்ஜுனா விருதுக்கு தேர்வானவர்கள்

  • விதித் குஜராத்தி - செஸ்

  • திவ்யா தேஷ்முக் - செஸ்

  • தேஜஸ்வின் சங்கர் - தடகளம்

  • முஹம்மது அஜ்மல் - தடகளம்

  • பிரியங்கா கோஸ்வாமி - தடகளம்

  • ட்ரீசா ஜாலி - பேட்மிண்டன்

  • காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன்

  • நரேந்தர் - குத்துச்சண்டை

  • தனுஷ் ஸ்ரீகாந்த் - காது கேளாதோர் துப்பாக்கிச் சுடுதல்

  • லால்ரெம்சியாமி - ஹாக்கி

  • ராஜ்குமார் பால் - ஹாக்கி

  • சுர்ஜித் - கபடி

  • பூஜா - கபடி

  • ருத்ரன்ஷ் கண்டேல்வால் - பாரா ஷூட்டிங்

  • ஏக்தா பயான் - பாரா தடகளம்

  • அரவிந்த் சிங் - படகுப் போட்டி

  • அகில் ஷியோரன் - துப்பாக்கிச் சுடுதல்

1962 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற கால்பந்து வீரர் அருமைநாயகத்துக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு மத்திய அரசு யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை.

summary

The Ministry of Youth Affairs and Sports on Tuesday announced the National Sports Awards 2025, with 17 sportspersons given the Arjuna Award and one receiving the lifetime honour. The biggest talking point, however, was the absence of a recipient for the Major Dhyan Chand Khel Ratna, India’s highest sporting honour.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments