விளையாட்டின் தலைநகராக தமிழ்நாடு வரவேண்டும்: ஆதவ் அர்ஜுனா
கிராமப்புறங்களில் விளையாட்டைக் கொண்டுசேர்ப்பதன் மூலம் சாதியை ஒழிக்க முடியும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து...
கிராமப்புறங்களில் விளையாட்டைக் கொண்டுசேர்ப்பதன் மூலம் சாதியை ஒழிக்க முடியும் என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
சென்னையில் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் விளையாட்டுப் போட்டிகள் வைக்கப்படுகின்றன.
இந்தப் போட்டிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். விளையாட்டுப் போட்டி என்றால், முதல்வரும் கண்டிப்பாக வருவார். நீதித் துறையில் இருப்பவர்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
என்னுடைய மதம் எதுவென்று கேட்டால், விளையாட்டுதான் என்னுடைய மதம் என்பேன். விளையாட்டுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களைக் கொண்டு வந்தார்.
தவெக அரசும் அனைத்து அதிகாரிகளுடனும் நட்பு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த அழுத்தமோ மோதலோ கிடையாது.
1994-ல் ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சென்னையில் உள்கட்டமைப்பு எதுவும் கொண்டு வரப்படவில்லை. சர்வதேச அளவிலான விளையாட்டுத் திடல்களை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வருவதே முதல்வரின் நோக்கம். இந்தியாவின் விளையாட்டுத் துறையில் தலைநகரம் என்றால், தமிழ்நாடுதான் என்ற நிலை வர வேண்டும்.
கிராமப்புறங்களில் விளையாட்டைக் கொண்டுசேர்த்தால், வருங்காலங்களில் சாதி என்ற ஒன்றே இருக்காது" என்று தெரிவித்தார்.
Tamil Nadu must become the sports capital of India, says Minister Aadhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.