யுஎஸ் ஓபன்: காயத்தால் விலகினார் சின்னர்
உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் ஜேனிக் சின்னா் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து காயத்தால் விலகினாா்.
உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் ஜேனிக் சின்னா் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து காயத்தால் விலகினாா்.
கடந்த 2024-இல் யுஎஸ் ஓபனில் பட்டம் வென்ற சின்னா், தற்போது வலது மூட்டில் காயம் காரணமாக விலகுவதாகவும், குணமடைய நாள்கள் ஆகும்,. என்பதால் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான யுஎஸ் ஓபனில் இருந்து விலகுவதாக தெரிவித்தாா்.
நடப்புச் சாம்பியன் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் மணிக்கட்டு காயத்தில் இருந்து குணமடைந்து, நிகழாண்டு யுஎஸ் ஓபனில் ஆடவுள்ளதாக தெரிவித்தாா். அல்கராஸ் இல்லாத நிலையில், விம்பிள்டனில் பட்டம் வென்றிருந்தாா் சின்னா்.
Advertisement
Advertisement
7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் அல்கராஸ் மணிக்கட்டு காயத்தால் கடந்த ஏப்ரல் முதல் ஆடவில்லை. பிரெஞ்சு ஓபன், விம்பிள்டனில் ஆடவில்லை. சின்னா்-அல்கராஸ் இருவரும் கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் இறுதியில் மோதிய போது, 4 செட்களில் வென்றிருந்தாா் அல்கராஸ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.