FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

யுஎஸ் ஓபனில் சபலென்காவுக்கு அதிர்ச்சி; முதல்முறையாக ரைபகினா சாம்பியன்! நம்.1 வீராங்கனையாக முன்னேற்றம்!

யுஎஸ் ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற ரைபகினா குறித்து...

13 செப்டம்பர் 2026, 10:45 am IST
யுஎஸ் ஓபன் கோப்பைக்கு முத்தமிட்ட ரைபகினா. - படம்: ஏபி
பகிர்:

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - கஜகஸ்தானின் எலினா ரைபகினா இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இந்தப் போட்டியில் சபலென்காவை 6-4 5-7 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, முதல்முறையாக தனது யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை எலினா ரைபகினா வென்றார்.

ரஷ்யாவில் பிறந்த கஜகஸ்தான் வீராங்கனை முதல் செட்டில் வென்று இரண்டாவது செட்டில் தோல்வியுற்றார். இருப்பினும் தனது பொறுமையையும் நம்பிக்கையும் விடாமல் மூன்றாவது செட்டில் வென்று கோப்பையை தனதாக்கினார்.

Advertisement

Advertisement

முதல் செட்டை வெல்ல 44 நிமிஷங்கள் பிடித்தன. பின்னர். ஒட்டுமொத்த ஆட்டமும் 141 நிமிஷங்களில் (2 மணி நேரம் 21 நிமிஷங்கள்) முடிந்தன.

யுஎஸ் ஓபனில் ஹாட்ரிக் சாம்பியனாக காத்திருந்த சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்து, தனது முதல் சாம்பியன் பட்டத்தை ரைபகினா வென்றார்.

இந்த வெற்றியுடன் ரைபகினா உலகின் நம்.1 வீராங்கனை என்ற இடத்தையும் பிடித்தார். யுஎஸ் ஓபன் மற்றும் நம்.1 இடத்தை சபலென்கா ஒரே போட்டியில் இழந்தார்.

summary

Rybakina dethrones Sabalenka to win first US Open title, claim world no. 1 spot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments