யுஎஸ் ஓபனில் 142 நிமிஷ போராட்டம்..! 6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா!
யுஎஸ் ஓபனில் காலிறுதியில் வென்ற நடப்பு சாம்பியன் சபலென்கா குறித்து...
யுஎஸ் ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் அரினா சபலென்கா காலிறுதியில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு லிண்டா நோஸ்கோவாவை வென்றார்.
இந்த வெற்றியுடன் ஆறாவது முரையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சபலென்கா மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக யுஎஸ் ஓபனை வெல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
காலிறுதியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா - பெலாரஸின் அரினா சபலென்கா மோதினார்கள். இந்தப் போட்டியில் சபலென்கா 7- 6(1), 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டி 2 மணி நேரம் 22 நிமிஷங்கள் நடைபெற்றன. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு சபலென்கா தனது வெற்றியை நிலைநாட்டினார்.
அரையிறுதியில் ஜெஸ்ஸிகா பெகுலாவை எதிர்கொள்கிறார். இது சபலென்காவின் ஆறாவது அரையிறுதிப் போட்டியாகும். இதில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.
கடந்த 2021 முதல் தவறாமல் அரையிறுதிக்குத் தேர்வாகி வருகிறார். 2024, 2025ல் கோப்பை வென்ற சபலென்காவுக்கு ஹாட்ரிக் அடிக்க வாய்ப்பிருக்கிறது.
A 142-minute battle at the US Open! Sabalenka advances to the semi-finals for the sixth time!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.