யுஎஸ் ஓபனில் 53 நிமிஷங்களில் வென்ற சபலென்கா..! அதிரடியாக மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!
யுஎஸ் ஓபனில் இரண்டாவது சுற்றில் அபாரமாக வென்ற அரினா சபலென்கா குறித்து...
யுஎஸ் ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா இரண்டாவது சுற்றில் வெறுமனே 53 நிமிஷங்களில் அபாரமாக வென்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தொடக்கத்தில் தனது நம்.1 இடத்தை இழந்துவிடுவார் என்பதுபோல் விளையாடினார். அடுத்தடுத்த சுற்றுகளில் மிரட்டலாக விளையாடி வருகிறார்.
மூன்றாவது சுற்றில் பெலாரஸின் அரினா சபலென்கா - ரஷியாவின் போலினா யாட்செங்கோ உடன் மோதினார். இந்தப் போட்டியில் 6-1, 6-1 என்ற நேட் செட்களில் வென்று அசத்தினார்.
Advertisement
Advertisement
வெறுமனே 53 நிமிஷங்களில் இந்த வெற்றியைப் பெற்று மூன்றாவது சுற்றுக்கு அதிரடியாக முன்னேறியுள்ளார். அடுத்த சுற்றில் ரஷியாவில் பிறந்த உஸ்பெகிஸ்தான் வீராங்கனை கமிலா ரகிமோவா உடன் மோதவிருக்கிறார்.
அடுத்த சுற்றில் சபலென்கா வென்றால் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறுவார் என்பது கவனிக்கத்தக்கது. சமீபத்திய சொதப்பல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்தப் போட்டி இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Aryna Sabalenka powers her way into the third round of the US Open in just 53 minutes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.