உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனுக்கு அதிர்ச்சி அளித்த 15 வயது தில்லி சிறுவன்!
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனுக்கு அதிர்ச்சி அளித்த 15 வயது தில்லி சிறுவன் வந்தன் அலங்காரை பற்றி...
உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனுக்கு இந்தியாவைச் சேர்ந்த 15 வயதான தில்லி சிறுவன் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் உருவானதாகக் கருதப்படும் சதுரங்க விளையாட்டுக்கு உலகளவில் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கின்றனர். நேரடியாகப் போட்டிகளுக்குச் சென்று விளையாடாவிட்டாலும், ஆன்லைன் செஸிலும் பலர் ஈடுபாடு காட்டி வருகின்றனர். மிகவும் பிரபலமான ஆன்லைன் செஸ் தளமான செஸ்.காமில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் Titled Tuesday ஆன்லைன் போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் தில்லியைச் சேர்ந்த 15 வயதான வந்தன் அலங்கார் சவாய், உலகின் நம்பர் 1 செஸ் கிராண்ட்மாஸ்டரான நார்வேயைச் சேர்ந்த கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
கடந்த ஆக. 18 ஆம் தேதி நடைபெற்ற பிளிட்ஸ் போட்டியில், 2,288 ஃபிடே கிளாசிக்கல் ரேட்டிங் கொண்ட கேண்டிடேட் மாஸ்டரான வந்தன், கார்ல்சனை (2,823 ரேட்டிங்) எதிர்கொண்டிருக்கிறார்.
வெள்ளை நிறக் காய்களுடன் வந்தனும், கருப்பு நிறக் காய்களுடன் கார்ல்சனும் விளையாடினர். 5 நிமிடங்கள் கொண்ட போட்டியில் வழக்கம் போல் வந்தன் e4 நகர்வும் கார்ல்சன் e5 நகர்வுடன் விளையாட போட்டி தொடர்ந்தது. 31-வது நகர்த்தலில் இருவரும் ராணியை இழக்க போட்டி மேலும் தொடர்ந்தது. சரியாக 50 நகர்த்தலில் ஈடுகொடுக்க முடியாமல், கார்ல்சன் போட்டியிலிருந்து விலகியதால், வந்தன் வெற்றி பெற்றார்.
உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவரான கார்ல்சனை எதிர்கொண்டது குறித்து தனது பெற்றோரிடமோ, பயிற்சியாளர்களிடமோ வந்தன் எதுவும் கூறவில்லை. போட்டி முடிந்ததும் வழக்கம்போல் தூங்கச் சென்றிருக்கிறார்.
அதன்பின்னர், முன்னாள் வங்கி அதிகாரியான வந்தனின் தந்தை அலங்கார் சவாய், எதேர்ச்சையாக செஸ்.காமில் பார்த்தபோது வந்தன், கார்ல்சனை வீழ்த்தியதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்திருக்கிறார்.
வந்தனின் பயிற்சியாளர் குர்பிரீத் பால் சிங்குக்கும், அடுத்த நாள் வரை இந்தத் தோல்வி குறித்துத் தெரியாமல் இருந்த நிலையில், அவரும் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார்.
வந்தனுக்கு சிறுவயதில் செஸ் மீது பெரிய ஆர்வம் இல்லாத நிலையில், அவரை அவரது பெற்றோர் வற்புறுத்தி செஸ் விளையாட வைத்திருக்கின்றனர். உலகின் நம்.1 வீரரான கார்ல்செனை வீழ்த்தி ஒரேநாளில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியிருக்கிறார் வந்தன் அலங்கார்.
Delhi teenager Vandan Alankar Sawai beat Magnus Carlsen in Chess.com's Titled Tuesday blitz event. The win stood out as he quietly moved on, with his family and coach learning about it later.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.