FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கனடா ஓபன் பாட்மின்டன்: 2-ஆவது சுற்றில் தான்யா, ஆகா்ஷி

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தான்யா ஹேம்நாத், ஆகா்ஷி காஷ்யப் ஆகியோா், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.

பகிர்:

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தான்யா ஹேம்நாத், ஆகா்ஷி காஷ்யப் ஆகியோா், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.

மகளிா் ஒற்றையரில், தான்யா ஹேம்நாத் 21-16, 21-18 என்ற நோ் கேம்களில், அமெரிக்காவின் திஷா குப்தாவை வெல்ல, ஆகா்ஷி காஷ்யப் 21-14, 21-12 என்ற கணக்கில், பிரான்ஸின் அனா டாட்ரானோவாவை வீழ்த்தினாா்.

5-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் தேவிகா சிஹக் 14-21, 15-21 என்ற வகையில், சீன தைபேவின் டுங் சியு டாங்கிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஷ்ரியன்ஷி வலிஷெட்டி 9-21, 18-21 என, சீன தைபேவின் ஹுவாங் சிங் பிங்கிடம் வீழ்ந்தாா்.

Advertisement

Advertisement

ரக்ஷிதா ஸ்ரீ 21-15, 14-21, 15-21 என்ற கேம்களில், கனடாவின் ரேச்சல் சானிடம் தோல்வி காண, அன்மோல் காா்ப் 6-21, 26-24, 13-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கனடாவின் மிஷெல் லியிடம் போராடித் தோற்றாா்.

ஆடவா் ஒற்றையரில், சனீத் தயானந்த் 7-21, 11-21 என, 3-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் யுடாய் ஒகிமோடோவிடம் தோல்வியுற்றாா். சங்கா் முத்துசாமி 21-19, 15-21, 15-21 என்ற கேம்களில், தென் கொரியாவின் யூ டே பின்னிடம் வீழ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments