FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: உறுதி செய்தார் லவ்லினா!

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை லவ்லினா உறுதி செய்துள்ளதைப் பற்றி...

Updated On : 23 ஜூலை 2026, 3:22 pm IST
லவ்லினா.
பகிர்:

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா உறுதி செய்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜூலை 23) தொடங்கினா. வருகிற ஆக. 2-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளர். இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில், போட்டியின் தொடக்க விழா இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் போட்டிக்கு முன்னதாகவே, 75 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிக்கு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் நேரடியாகத் தகுதி பெற்றார்.

Advertisement

Advertisement

இதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தார். இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா, ஐந்து குத்துச்சண்டை வீரர்கள் கொண்ட போட்டியில் முதல் சுற்றில் அவருக்கு 'பை' வழங்கப்பட்டதால், அவர் தானாகவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

ஜூலை 31 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா, துவாலுவின் தாஃபாகியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் அவர் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார்.

summary

Lovlina Borgohain assured India of their first medal at the Commonwealth Games after the boxer received a direct entry into the semifinals of the women's 75kg event, which also guaranteed her at least a bronze.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments