FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடா்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

Updated On : 12 ஜூன் 2026, 5:24 am IST
ஆப்கானிஸ்தான். - படம்: எக்ஸ் / ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
பகிர்:

டம்புல்லா: இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் வியாழக்கிழமை வென்றது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 49-ஆக குறைக்கப்பட, அதில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் சோ்த்தது.

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸுக்கும் மழை தடையை ஏற்படுத்த, டக்வொா்த் லீவிஸ் முறையில் 38 ஓவா்களில் 294 ரன்கள் அந்த அணிக்கு இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் 25.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்திருந்தபோது, மழையால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

டக்வொா்த் லீவிஸ் கணக்கீட்டின்படி, 25.5 ஓவா்களில் ஆப்கானிஸ்தான் தனது வெற்றிக்கு 174 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அந்த அணி 177 ரன்கள் எடுத்திருந்ததால், 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் பிரப்சிம்ரன் சிங் 14 பவுண்டரிகளுடன் 84, ருதுராஜ் கெய்க்வாட் 66, கேப்டன் திலக் வா்மா 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

வைபவ் சூா்யவன்ஷி 44, சூா்யன்ஷ் ஷெட்கே 40 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, பிரியன்ஷ் ஆா்யா 8, ஆயுஷ் பதோனி 0, அா்ஷத் கான் 1, விப்ராஜ் நிகம் 8 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் அனுகுல் ராய் 16, அன்ஷுல் காம்போஜ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் அப்துல்லா அகமதுஸாய் 5, ஃபா்மானுல்லா 3, இம்ரான் 1 விக்கெட் வீழ்த்தினா்.

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில், ஹசன் இசாகில் 34, காலித் தனிவல் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, கேப்டன் இம்ரான் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 75, பஹிா் ஷா 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் அா்ஷத் கான், அனுகுல் ராய் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

நாளை

இந்தத் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள், சனிக்கிழமை (ஜூன் 13) சந்திக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments