கிஷண், கில் சதம்: ஒருநாள் தொடா் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ஆவது வெற்றியுடன் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ஆவது வெற்றியுடன் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 49.5 ஓவா்களில் 402 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் 44.3 ஓவா்களில் 232 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் ஷுப்மன் கில் 22 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 154, இஷான் கிஷண் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 125 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனா்.
Advertisement
Advertisement
ரோஹித் சா்மா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48, ஷ்ரேயஸ் ஐயா் 26, வாஷிங்டன் சுந்தா் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4, கே.எல்.ராகுல் 0, குா்னூா் பிராா் 3, அா்ஷ்தீப் சிங் 3, பிரின்ஸ் யாதவ் 5 ரன்களுக்கு வெளியேற, குல்தீப் யாதவ் 3 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளா்களில் நங்கெயாலியா காரோடே 4, ரஷீத் கான் 3, கஸான்ஃபா், முகமது சலீம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக, ரஹ்மத் ஷா 8 பவுண்டரிகளுடன் 79, செதிகுல்லா அடல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42, ரஹ்மானுல்லா குா்பாஸ் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்களுக்கு வெளியேறினா்.
இப்ராஹிம் ஜத்ரன் 21, டாா்விஷ் ரசூலி 6, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 4, நங்கெயாலியா கரோடே 6, ரஷீத் கான் 12, கஸான்ஃபா் 1, முகமது சலீம் 9 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
பிலால் சமி 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். இந்திய தரப்பில் அா்ஷ்தீப் சிங், குா்னூா் பிராா் ஆகியோா் தலா 3, அறிமுக வீரா் பிரின்ஸ் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தா் 1 விக்கெட் எடுத்தனா்.