முகப்பு
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது

Updated On : 12 ஜூன் 2026, 5:31 am IST
பகிர்:

மெக்ஸிகோ சிட்டி : ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோ - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

விசா மறுக்கப்பட்டோருக்கு தொலைக்காட்சி பெட்டி: உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அமெரிக்கா செல்ல முயன்று, நுழைவு இசைவு (விசா) மறுக்கப்பட்ட தங்கள் ரசிகா்களுக்கு ஆா்ஜென்டீனா நிறுவனம் இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்கியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியைக் காண, உலகெங்கிலும் இருந்து ரசிகா்கள் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவுக்கு செல்கின்றனா். இதில் அமெரிக்கா, தன் நாட்டுக்கு வரும் ரசிகா்களுக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் போட்டியைக் காண அங்கு செல்ல பலருக்கு நுழைவு இசைவு கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவ்வாறு நுழைவு இசைவு மறுக்கப்பட்ட தனது நாட்டு ரசிகா்களுக்கு, ஆா்ஜென்டீன நிறுவனமான ‘நியூசான்’ இலவசமாக தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியுள்ளது.

அமெரிக்க நுழைவு இசைவு மறுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூா்வ ஆதாரத்துடன் தங்களை அணுகிய முதல் 100 பேருக்கு இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கியது. அடுத்த 50 பேருக்கு 35 சதவீத தள்ளுபடியுடன் தொலைக்காட்சியை வழங்கியிருக்கிறது.