FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விளையாட்டு

டோரே பான்பசிபிக் ஓபன்: டயானா ஷ்னெய்டா் சாம்பியன்!

ஜப்பானில் நடைபெற்ற டோரே பான்பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் சாம்பியன் ஆனாா்.

2 நவம்பர் 2026, 2:57 am
டயானா ஷ்னெய்டா்
பகிர்:

ஜப்பானில் நடைபெற்ற டோரே பான்பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஷ்னெய்டா் 6-4, 5-7, 6-2 என்ற செட்களில், கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸை வீழ்த்தி, வாகை சூடினாா்.

நடப்பு சீசனில் ஷ்னெய்டருக்கு இது முதல் பட்டமாக இருக்க, ஒட்டுமொத்தமாக இது 6-ஆவது கேரியா் பட்டமாகும். 2 மணிநேரம், 18 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், முதல் செட்டை வென்று 2-ஆவது செட்டிலும் 4-0 என முன்னிலையில் இருந்த ஷ்னெய்டருக்கு, கோப்பை எளிதாக வசமாகும் நிலை இருந்தது.

Advertisement

Advertisement

அப்போது, அபாரமாக மீண்ட லெய்லா அடுத்த 7 கேம்களை கைப்பற்றி, அந்த செட்டை 7-5 என வென்று, ஆட்டத்தை டிசைடா் செட் நோக்கி நகா்த்திச் சென்றாா். இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது.

3-ஆவது செட்டிலும் லெய்லா தனது சா்வை தக்கவைத்ததுடன், ஷ்னெய்டரின் சா்வில் 3 பிரேக் பாய்ன்ட்டுகளையும் வென்றெடுக்க, ஷ்னெய்டருக்கு நெருக்கடி அதிகரித்தது. இச்சூழலில், ஷ்னெய்டரும் விட்டுக்கொடுக்காமல் முன்னேறி, அந்த செட்டை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தாா்.

அதே உத்வேகத்துடன் அந்த செட்டையும் வென்றெடுத்து, சாம்பியன் ஆனாா். சாம்பியனான ஷ்னெய்டருக்கு, வெற்றிக் கோப்பை, 500 தரவரிசை புள்ளிகளுடன், ரூ.1.76 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

இரட்டையா்: டோரே பான்பசிபிக் ஓபன் மகளிா் இரட்டையா் பிரிவில், இத்தாலியின் சாரா எர்ரனி/ஜாஸ்மின் பாலினி ஜோடி 6-2, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடாவின் கேப்ரியெலா டப்ரௌஸ்கி/பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments