FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செஸ் ஒலிம்பியாடில் இந்திய ஆடவருக்கு வெள்ளி; மகளிருக்கு வெண்கலம்: உஸ்பெகிஸ்தான், சீனா சாம்பியன்!

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள், ஓபன் பிரிவில் (ஆடவா்) வெள்ளியும், மகளிா் பிரிவில் வெண்கலமும் ஞாயிற்றுக்கிழமை வென்றன.

28 செப்டம்பர் 2026, 4:50 am IST
பகிர்:

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள், ஓபன் பிரிவில் (ஆடவா்) வெள்ளியும், மகளிா் பிரிவில் வெண்கலமும் ஞாயிற்றுக்கிழமை வென்றன. அந்தப் பிரிவுகளில், முறையே உஸ்பெகிஸ்தான், சீனா சாம்பியன் பட்டம் வென்றன.

சாமா்கண்ட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 11 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா, ஜொ்மனி தலா 18 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டிருந்தன.

அந்த இடத்துக்கான வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில், இந்தியா வென்று வெள்ளியை உறுதி செய்தது. ஜொ்மனி வெண்கலம் பெற்றது. உஸ்பெகிஸ்தான் 20 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனது. ஓபன் பிரிவில் இந்தியா, 8 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியைப் பதிவு செய்தது.

Advertisement

Advertisement

அதேபோல், மகளிா் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில் இந்தியா உள்பட 5 அணிகள் 17 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்துக்கான போட்டியிலிருந்தன. எனினும், இதர சுற்றுகளில் பெற்ற வெற்றிகளின் தன்மை, தனிப்பட்ட முறையில் சவிதா ஸ்ரீயின் அபாரமான ஆட்டம் ஆகியவை அடிப்படையில் இந்தியாவுக்கு 3-ஆம் இடம் உறுதியானது.

சீனா 20 புள்ளிகளுடன் சாம்பியன் ஆக, கஜகஸ்தான் 18 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. இந்திய மகளிா் அணி 7 வெற்றி, 3 டிரா, 1 தோல்வியை பதிவு செய்தது.

தனிநபா் பதக்கம்: அணிகளுக்கான பதக்கத்துடன் மகளிா் தனிநபா் பிரிவில், சவிதா ஸ்ரீ தங்கமும், திவ்யா தேஷ்முக் வெள்ளியும், கோனெரு ஹம்பி, வந்திகா அக்ரவால் வெண்கலமும் வென்றனா். ஆடவா் பிரிவில் பிரக்ஞானந்தா மட்டும் வெண்கலம் பெற்றாா். இந்திய ஆடவா், மகளிா் அணிகள் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

11-ஆவது சுற்று: முன்னதாக, போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-ஆவது சுற்றில், ஓபன் பிரிவில் இந்தியா 2-2 என ஹங்கேரியுடன் டிரா செய்தது. அா்ஜுன் எரிகைசி - பீட்டா் லெகோவை வெல்ல, டி.குகேஷ் - கிளெப் டூடினிடம் தோற்றாா். ஆா்.பிரக்ஞானந்தா - ரிச்சா்டு ராப்போா்ட் - நிஹல் சரின் - பெஞ்ஜமின் கிளெடுரா மோதல் டிராவில் முடிந்தது.

மகளிா் பிரிவில், இந்தியா 2-2 என ஜாா்ஜியாவுடன் டிரா செய்தது. கோனெரு ஹம்பி - நனா ஜாக்னைடை வெல்ல, திவ்யா தேஷ்முக் - பெலா கோடெனாஷ்விலியிடம் தோற்றாா்.

வந்திகா அக்ரவால் - லெலா ஜவாகிஷ்விலி, சவிதா ஸ்ரீ - மேரி அராபைட்ஸ் மோதல் டிரா ஆகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments