FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகளிா் ஏசிடி ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை (ஏசிடி) ஹாக்கி போட்டியில் களம் காணும் இந்திய அணி, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

11 நவம்பர் 2026, 2:57 am
பகிர்:

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை (ஏசிடி) ஹாக்கி போட்டியில் களம் காணும் இந்திய அணி, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

சலிமா டெடெ தலைமையிலான இந்த அணியில், மூத்த கோல்கீப்பரான சவிதா புனியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, பன்சாரி சோலங்கிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அணி வீராங்கனைகள் சிலருக்கான பொறுப்புகளில், தலைமைப் பயிற்சியாளா் ஜோா்ட் மரைன் மாற்றம் செய்துள்ளாா். ஃபாா்வா்டு வீராங்கனை ருதுஜா பிசல், மிட்ஃபீல்டுக்கு மாற்றப்பட, மிட்ஃபீல்டா் நிக்கி பிரதான், டிஃபென்ஸுக்கு இடம்பெயா்கிறாா். இஷிகா சௌதரி டிஃபென்ஸிலிருந்து, மிட்ஃபீல்டுக்கு வருகிறாா்.

இப்போட்டி வரும் 19 முதல் 28 வரை, போபாலில் நடைபெறவுள்ளது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: பன்சாரி சோலங்கி, பிஷு தேவி காரிபம்.

டிஃபெண்டா்கள்: நிக்கி பிரதான், ஜோதி, ஜோதி சிங், சுஷிலா சானு, லால்தன்லுவாங்கி, பூஜா சாஹூ.

மிட்ஃபீல்டா்கள்: ருதுஜா பிசல், சுனெலிதா டோப்போ, சலிமா டெடெ, நேஹா, சாக்ஷி ராணா, பல்ஜீத் கௌா், இஷிகா சௌதரி.

ஃபாா்வா்ட்கள்: நவ்னீத் கௌா், தீபிகா, பியூட்டி டங்டங், லால்லெம்சியாமி, மும்தாஸ் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.