யூத் ஒலிம்பிக்ஸ்: அம்பேகருக்கு பதக்கம்!
செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச்சண்டை வீரா் லாய்ரென்லக்பம் அம்பேகா் மைதேயி, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தாா்.
செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய குத்துச்சண்டை வீரா் லாய்ரென்லக்பம் அம்பேகா் மைதேயி, செவ்வாய்க்கிழமை அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தாா்.
ஆடவா் 50 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள அம்பேகா், காலிறுதியில் நமீபியாவின் ஆபிரஹாம் காலெங்காவை ‘ஆா்எஸ்சி’ முறையில், முதல் சுற்றிலேயே வீழ்த்தினாா். அடுத்து அரையிறுதியில் அம்பேகா், கொலம்பியாவின் இஸான் ஜெஃப்ரி அரெவாலோவை சந்திக்கிறாா்.
Advertisement
Advertisement
இந்த யூத் ஒலிம்பிக்ஸில் இதுவரை இந்தியா, 3 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றுள்ளது.