FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

யூத் ஒலிம்பிக்ஸ்: தன்விக்கு வெள்ளி

செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை தன்வி பத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

7 நவம்பர் 2026, 2:13 am
தன்வி பத்ரி - படம்: எக்ஸ் / சாய் மீடியா
பகிர்:

செனகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை தன்வி பத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

போட்டியின் வரலாற்றில் பதக்கம் வென்ற, இந்தியாவின் முதல் பாட்மின்டன் வீராங்கனையாக அவா் சாதனை படைத்தாா்.

மகளிா் ஒற்றையா் இறுதியில், தன்வி 21-15, 13-21, 24-26 என கடுமையாகப் போராடி, நடப்பு ஜூனியா் உலக சாம்பியனான சீனாவின் ஜாங் யி ஜின்னிடம் தோல்வியுற்றாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 22 நிமிஷங்கள் நீடித்தது.

Advertisement

Advertisement

இந்த ஆட்டத்தின் கடைசி கேமில், 6 மேட்ச் பாய்ன்ட்டுகளை தக்கவைத்த தன்விக்கு, 3 முறை வெற்றிக்கான வாய்ப்பு கைகூடியது. எனினும் ஜின் விடாப்பிடியாக விளையாடி தன்வியை தோற்கடித்தாா்.

யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற 3-ஆவது இந்தியராக தன்வி பெருமை பெற்றாா். இதற்கு முன் ஹெச்.எஸ். பிரணய் (2010), லக்ஷயா சென் (2018) ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

போட்டியில் இத்துடன் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.