யூத் ஒலிம்பிக்ஸ் இறுதியில் முதல் இந்திய வீராங்கனையாக தன்வி பத்ரி வரலாற்றுச் சாதனை!
யூத் ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முதல் இந்திய வீராங்கனையாக தன்வி சாதனை படைத்துள்ளது குறித்து...
யூத் ஒலிம்பிக்ஸில் மகளிர் பாட்மின்டன் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முதல் இந்திய வீராங்கனையாக தன்வி பத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் டாகரில் யூத் ஒலிம்பிக்ஸ் 2026 நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை யூஸுனோ வாடனபேயுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் 15 வயதான இந்திய வீராங்கனை தன்வி பத்ரி 21-14, 11-21, 21-19 என்ற கேம்களில் த்ரில் வெற்றி பெற்றார். 54 நிமிஷங்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது.
Advertisement
Advertisement
முதன்முறையாக யூத் ஒலிம்பிக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை தன்வி பத்ரி தற்போது இறுதிக்கும் முன்னேறியுள்ளார். பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்துவாஎ என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இந்திய தரப்பில் 2010ல் சிங்கப்பூர் போட்டியில் பிரணாய் வெள்ளியும், 2018ல் பியுனோஸ் அயர்ஸ் போட்டியில் லக்ஷயா சென் வெள்ளியும், 2014 போட்டியில் ஆதித்ய ஜோஷி அரையிறுதி வரை முன்னேறி இருந்தனா்.
இறுதிப் போட்டியில் தன்வி சீன வீராங்கனை இ க்ஸின் ஜாங் உடன் மோதவிருக்கிறார். முன்னதாக இருவரும் ஒரேயொரு முறை ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் மோதியிருந்தார்கள். அதில் சீன வீராங்கனை வென்றிருந்தார். இதற்கு பழிதீர்க்கும் வாய்ப்பு தன்விக்கு அமைந்துள்ளது.