யூத் ஒலிம்பிக்ஸில் 15 வயதில் வரலாற்று வெள்ளி வென்றார் தன்வி பத்ரி!
யூத் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக தன்வி பத்ரி சாதனை படைத்துள்ளது குறித்து...
யூத் ஒலிம்பிக்ஸில் மகளிர் பாட்மின்டன் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக 15 வயதான தன்வி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியில் உலக ஜூனியர் சாம்பியன் ஜாங் இ க்ஸினிடம் தோல்வியுற்றார்.
ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் டாகரில் யூத் ஒலிம்பிக்ஸ் 2026 நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையுடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டி 1 மணி நேரம் 22 நிமிஷங்கள் விளையாடப்பட்டது. இதில் இந்திய வீராங்கனைக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் 6 புள்ளிகளில் தவறவிட்டார்.
இறுதியில் தன்வி பத்ரி 21-15, 13-21, 24-26 என்ற கேம்களில் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்றார். முதல் கேமில் அசத்திய தன்வி இரண்டாவது கேமில் பின்னடைவைச் சந்தித்தார். இறுது கேம் மிகவும் சுவாரசியமாகச் சென்று 24-26 என்ற புள்ளிகளில் முடிந்தது.
இதுவரை இந்தியா சார்பில் ஆடவர் பிரிவில் ஹெச்எஸ் பிரணாய் (2010), லக்ஷயா சென் (2018) வெள்ளி வென்றுள்ளார்கள். மகளிர் பிரிவில் முதல்முறையாக தன்வி வெள்ளி வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.