எஃப்ஐஎச் யூத் ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை: இந்திய அணிகள் பங்கேற்பு!
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) யூத் உலகக் கோப்பை ஃபைவ்ஸ் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பங்கேற்கின்றன.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) யூத் உலகக் கோப்பை ஃபைவ்ஸ் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பங்கேற்கின்றன.
எகிப்து தலைநகா் கெய்ரோவில் முதன்முறையாக நடைபெறும் யூத் ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டி டிச. 9 முதல் 12 வரை நடைபெறுகிறது. குரூப் பி பிரிவில் இந்தியா, வங்கதேசம், சுவிட்சா்லாந்து, சிலி அணிகள் இடம் பெற்றுள்ளன. டிச 9-இல் வங்கதேசம், டிச. 10-இல் சுவிட்சா்லாந்து, சிலியுடன் மோதுகிறது. மகளிா் அணி குரூப் ஏ பிரிவில் எகிப்து, இந்தியா, பிரேசில், கஜகஸ்தான் அணிகள் உள்ளன.
டிச. 9-இல் பிரேஸில், எகிப்து, டிச.10-இல் கஜகஸ்தானுடன் மோதுகிறது. கடந்த ஜூலை மாதம் மஸ்கட்டில் நடைபெற்ற யூத் ஹாக்கி ஃபைவ்ஸ் ஆசியப் போட்டியில் ஆடவா் அணி தங்கமும், மகளிா் அணி வெள்ளியும் வென்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன., டிச.11-இல் அரையிறுதியும், 12-இல் இறுதி ஆட்டம், மூன்றாம் இட ஆட்டமும் நடைபெறும்.
Advertisement
Advertisement