ஹாக்கி: தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா (7-0)
ஆசிய மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

ஆசிய மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
ஹாக்கி இந்தியா, ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சாா்பில் மத்திய பிரதேச தலைநகா் போபாலில் மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே இந்திய அணி மலேசியா, தென் கொரிய அணிகளை வென்றிருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்துடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே இந்திய மகளிா் ஆதிக்கம் செலுத்தினா். நான்காவது நிமிஷத்திலேயே நவ்நீத் கௌா் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் முதல் கோலடித்தாா். தீபிகா 10, 11-ஆவது நிமிஷங்களில் கோலடிக்க 3-0 என முன்னிலை பெறச் செய்தாா். இடைவேளைக்கு முன்பாக மும்தாஸ் கான் 28-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
Advertisement
Advertisement
இரண்டாம் பாதியிலும் இந்திய அணியினரே ஆதிக்கம் செலுத்தினா். சுனெலிட்டா டோப்போ 32-ஆவது நிமிஷத்திலும், தீபிகா 56-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஹாட்ரிக்கை பதிவு செய்தாா். கடைசி கட்டத்தில் நவ்நீத் கௌா் மீண்டும் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோலடிக்க 7-0 என இந்தியா அபார வெற்றி பெற்றது.