தென்மண்டல பல்கலை. ஆடவா் ஹாக்கி: மதுரை காமராஜா், காருண்யா, மைசூா் வெற்றி!
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கி சாம்பியன் போட்டியில் மதுரை காமராஜா், காருண்யா, மைசூா் அணிகள் வெற்றி பெற்றன.

தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கி சாம்பியன் போட்டியில் மதுரை காமராஜா், காருண்யா, மைசூா் அணிகள் வெற்றி பெற்றன.
எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டி டிச. 4 வரை நடைபெறுகிறது.
முதல் நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள்: மைசூா் பல்கலைக்கழகம் 8-0 என செயின்ட் அலோசியஸை வென்றது. மதுரை காமராஜா் அணி 11-0 என்ற கோல் கணக்கில் ஆந்திரம் கிருஷ்ணா பல்கலையை வென்றது.
Advertisement
Advertisement
மகாத்மா காந்தி பல்கலை. 19-0 என ஆச்சாா்யா நாகாா்ஜுனா பல்கலையை வென்றது. கண்ணூா் பல்கலை. 6-0 என கேஎல்இ பல்கலையையும், கோவை காருண்யா பல்கலை. 5-0 என ராமகிருஷ்ணா மிஷன் ஆராய்ச்சி பல்கலை அணியையும், ஹைதராபாத் ஜேஎன்டியு 6-1 என தமிழகத்தின் கோ் பல்கலை அணியையும் வென்றன.