FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!

ஆசிய விளையாட்டு தொடரின் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...

யஷ்தீப் போகே மற்றும் நீரஜ் சௌகான். - பிடிஐ
பகிர்:

ஆசிய விளையாட்டு தொடரின் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய விளையாட்டுத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை காலை ஒகாசாகி சுவோ சோகோ பூங்கா சதுக்கத்தில் ஆடவருக்கான ரிகர்வ் வில்வித்தையின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

வில்வித்தை அரையிறுதியில் ஈரானை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்டது.

Advertisement

Advertisement

இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, யஷ்தீப் போகே மற்றும் நீரஜ் சௌகான் ஆகிய மூவர் கொண்ட அணி, தென்கொரியாவின் லீ வூ-சியோக், கிம் ஜெ டியோக் மற்றும் கிம் வூ ஜின் ஆகியோர் அடங்கிய அணியை எதிர்கொண்டனர்.

தொடக்கத்தில் வலிமை மிக்க நடப்பு சாம்பியனான கொரியாவுக்கு சவால் அளித்தாலும், அந்த முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இறுதியில் 56-56, 50-57, 54-56 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. 1-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, வெள்ளிப் பதக்கத்துடன் தனது பயணத்தை நிறைவு செய்தது.

summary

The Indian men's recurve archery team signed off with a silver medal after going down 1-5 to defending champions Korea in a roller-coaster summit clash at the Asian Games here on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments