FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டு: துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்!

ஆசிய விளையாட்டு துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...

59 வினாடிகள் முன்பு
சல்மான் மற்றும் சத்நாம்.
பகிர்:

ஆசிய விளையாட்டு துடுப்பு படகுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20-வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தத் தொடரின் துடுப்பு படகுப் போட்டி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சல்மான் கான் மற்றும் சத்நாம் சிங் இருவரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் சீனாவின் யி சூடி மற்றும் யிடே நீ 6:09.37 நிமிடங்களில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தையும் உஸ்பெகிஸ்தானின் பாவெல் சோரின் மற்றும் மெக்ரோஜ்பெக் மமத்குலோவ் ஆகியோர் 6:10.49 நிமிடங்களில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

இந்திய ஜோடியான சல்மான் மற்றும் சத்நாம் இவரும் 6 நிமிடங்கள் 13 விநாடிகளில் இலக்கைக் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்த வெண்கலப்பதக்கத்தை தன்வசப்படுத்தினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துடுப்பு படகுப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

summary

Rowers Satnam Singh and Salman Khan secured India's first ever men's double sculls medal at the Asian Games with a third-place finish in Nagoya on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments