FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டு: மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்து சுச்சிகா தரியல் வரலாறு படைத்துள்ளது குறித்து...

21 செப்டம்பர் 2026, 12:27 pm IST
சுச்சிகா தரியல் - எக்ஸ்
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு தற்காப்புக் கலையில் (மார்ஷியல் ஆர்ட்ஸ்) இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார் வீராங்கனை சுச்சிகா தரியல்.

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர் மற்றும் குழு) போட்டி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான கலப்பு தற்காப்புக் கலை போட்டிகள் நடைபெற்றன. 60 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா சார்பில் சுச்சிகா தரியல் கலந்துகொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை ஹுய் ஹூன் டியோவிடம் போராடி தோல்வி அடைந்தார். எனினும், அவர் வெண்கலப் பதக்கத்தை தக்கவைத்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு தற்காப்புக் கலை பிரிவில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் வீராங்கனையிடம் தோல்வி அடைந்ததும் அதனை சற்றும் எதிர்பாராத சுச்சிகா, களத்திலேயே வருந்தி அழுதார். எதிர் போட்டியாளராக விளையாடிய சிங்கப்பூர் வீராங்கனை கைகுலுக்க அவரை ஆசுவாசப்படுத்த முயன்றபோதும் அவர் களத்தில் இருந்து எழவில்லை. பின்னர், பயிற்சியாளர் வந்து அவரைத் தூக்கி ஆசுவாசப்படுத்திய பிறகே வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வீராங்கனையிடம் தோல்வி அடைந்திருந்தாலும், கலப்பு தற்காப்புக் கலை போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை சுச்சிகா பெற்றுக்கொடுத்துள்ளார் என்பதால் அவர் என்றுமே நாட்டு மக்கள் மனங்களில் கொண்டாடப்படுவார் என பயிற்சியாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

summary

Asian Games 2026 Suchika Tariyal Bags Bronze in Traditional 60kg MMA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments