FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகளிர் கோல்ஃப் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..! வரலாறு படைத்த பிரணவி!

மகளிருக்கான கோல்ஃப் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்த வீராங்கனை பிரணவி குறித்து...

6 வினாடிகள் முன்பு
பிரணவி சரத் - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
பகிர்:

ஆசிய விளையாட்டு மகளிருக்கான கோல்ஃப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல்முறையாக தங்கம் வென்று கொடுத்து பிரணவி சரத் (23 வயது) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மகளிருக்கான கோல்ஃப் விளையாட்டில் பிரணவி சரத் யுஆர்எஸ் இறுதிப் போட்டியில் 265 (66, 63, 66, 70) புள்ளிகள் பெற்று குறைவான முயற்சிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் பிரிவில் சீன வீராங்கனை 266 புள்ளிகளுடன் வெள்ளியும் சிங்கப்பூர் வீராங்கனை 266 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றார்கள்.

பிரணவி சரத் வென்ற தங்கப் பதக்கம்தான் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2002ல் ஷிவ் கபூர் தனிநபர் ஆடவர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். மகளிர் பிரிவில் முதல்முறையாக இந்தப் பதக்கத்தை வென்று வரலாற்றில் பிரணவி இடம்பிடித்துள்ளார்.

இத்துடன் இந்தியாவுக்கு 18 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் உடன் 78 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

summary

Pranavi Sharath Urs makes history as India’s first Asian Games gold medallist in women's individual golf

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments