இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் முதல் தங்கம்..! 2-9லிருந்து 10-9 என த்ரில் வெற்றி!
நடப்பு ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்தியர் குறித்து...
நடப்பு ஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் சிஜீத் கல்கல் இந்தியாவுக்கு முதல்முறையாக தங்கம் வென்று பெருமைச் சேர்த்துள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 15 தங்கம் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் 10-9 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
தொடக்கத்தில் 2-9 என பின் தங்கியிருந்த சுஜீத் 10-9 என அபாரமான கம்பேக் அளித்து அனைவரையும் அசத்தினார். இத்துடன் ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்துள்ளன.
முதல்முறையாக இந்த எடிஷனில் மல்யுத்தத்தில் தங்கம் கிடைத்துள்ளது. இத்துடன் இந்தியாக்கு 15 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலப் பதக்கங்கள் உடன் மொத்தமாக 75 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
Sujeet Kalkal pulls off a stunning 10-9 comeback in the men's 65kg freestyle wrestling final become the Asian Games champion!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.