FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

3 முறை தங்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை!

மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...

நீரஜ் யாதவ்.
பகிர்:

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டி தொடரில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனுடைய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வீரர், வீராங்கனைகள் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தமாக 114 பதக்கங்களை வென்று அசத்தினர்.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மூன்று முறை தங்கம் வென்ற இந்திய தடகள வீரரான நீரஜ் யாதவ் (42) கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார். இதனால், அவருக்குப் போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், அய்ச்சி - நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்த நீரஜ் யாதவ், தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கடுமையான மன உளைச்சலில் இருந்ததாலேயே நீரஜ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டாலும், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

summary

Asian Para Games gold medallist Neeraj Yadav has allegedly died by suicide after consuming poison at his residence. The postmortem examination is underway in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments