இந்திய டெஸ்ட் அணி (கோப்புப்படம்)
கிரிக்கெட்

பிங்க் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனைகள்!

பிங்க் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் நிலை..

DIN

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை பிரபலமாக்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. மேலும், பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்று சாதனை படைத்தது.

இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்திய அணி இதுவரை 4 பகல் இரவு ஆட்டங்களில் விளையாடியிருக்கிறது. அதில், 3-ல் வெற்றியும், அடிலெய்ட்டில் ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய அணிக்காக விராட் கோலி மட்டும் 4 பகல் - இரவு போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இதையும் படிக்க..:பிங்க் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் டிராவிஸ் ஹெட்..! மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா?

இந்தியா விளையாடிய பகல் - இரவு ஆட்டங்களின் முடிவுகள்

  • இந்தியா - வங்கதேசம் (இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றி) -2019(கொல்கத்தா)

  • இந்தியா - ஆஸ்திரேலியா (8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி) 2020(அடிலெய்ட்)

  • இந்தியா - இங்கிலாந்து (10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)2021 (அஹமதாபாத்)

  • இந்தியா - இலங்கை(238 ரன்களில் வெற்றி) 2022

இதையும் படிக்க..:பிங்க் பந்தில் ஆடுவது எப்படி? தோல்வியே காணாத ஆஸி.யை வீழ்த்த டிப்ஸ் வழங்கிய புஜாரா!

பகல் - இரவு போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர்கள்

  • விராட் கோலி- 277 ரன்கள் (4 போட்டிகள்)

  • ரோஹித் சர்மா- 173 ரன்கள் (3 போட்டிகள்)

  • ஸ்ரேயாஸ் ஐயர்- 155 ரன்கள் (1 போட்டிகள்)

இதையும் படிக்க..:விராட் கோலியின் சதங்கள் என்னை பயமுறுத்துகின்றன! -ஆஸி. முன்னாள் கேப்டன்

பகல் - இரவு போட்டிகளில் அதிக விக்கெட்கள்

  • ரவிச்சந்திரன் அஸ்வின் - 18 விக்கெட்டுகள் (4 போட்டிகள்)

  • அக்‌ஷர் பட்டேல்- 14 விக்கெட்டுகள் (2 போட்டிகள்)

  • உமேஷ் யாதவ்- 11 விக்கெட்டுகள் (2 போட்டிகள்)

இதையும் படிக்க..: 36 பந்துகளில் உர்வில் பட்டேல் அதிரடி சதம்! 6 நாள்களில் 2 சாதனைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறும்பின் நகல்... கிருத்திகா!

ஐடி ஊழியர்கள் காரை வழிமறித்து தகராறு செய்த லட்சுமி மேனன்! வைரலாகும் விடியோ!

கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!

சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? பாலா பதில்!

மலை மேகங்கள்... ஆர்த்தி சுபாஷ்!

SCROLL FOR NEXT