FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இதுதான் ஒரே வழி... பும்ராவை எதிர்கொள்ள ஆஸி. வீரர்களுக்கு முன்னாள் வீரர் கொடுத்த அறிவுரை!

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Updated On : 23 டிசம்பர் 2024, 4:22 pm IST
ஜஸ்பிரித் பும்ரா - படம் | ANI
பகிர்:

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் அடுத்த போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமனில் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற கடைசி இரண்டு போட்டிகள் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறுவது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில், ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் அவருடன் இணைந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற தவறுகின்றனர்.

Advertisement

Advertisement

இதுதான் ஒரே வழி

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அனைவரும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பரவலாக பேசுகிறார்கள். நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர் ஒருவருக்கு எதிராக, அடிக்கடி பவுண்டரிகளை அடிக்க முடியாது. ஏனெனில், அவர் அதிக அளவிலான மோசமான பந்துகளை வீசமாட்டார். பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்கள் தொடர்ச்சியாக ஒன்று, இரண்டு என ரன்கள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவருக்கு எதிராக தடுப்பாட்டத்தை மிகவும் கவனமாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜஸ்பிரித் பும்ராவின் சவால் எளிதாக இருக்கப் போவதில்லை என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments