முகப்பு
கிரிக்கெட்

வீரேந்திர சேவாக்கை நினைவூட்டிய சாம் கொன்ஸ்டாஸ்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் புகழாரம்!

ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் வீரேந்திர சேவாக்கை தனக்கு நினைவூட்டியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

Updated On : 26 டிசம்பர் 2024, 5:41 pm IST
சாம் கொன்ஸ்டாஸ் - படம் | AP
பகிர்:

ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் வீரேந்திர சேவாக்கை தனக்கு நினைவூட்டியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

நாதன் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்ட இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் அவரது அதிரடியான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அனுபவம் வாய்ந்த வீரர்களே பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறும் நிலையில், இளம் வீரரான சாம் கொன்ஸ்டாஸ் பும்ரா பந்துவீச்சில் அதிரடியாக ரன்கள் குவித்தார்.

Advertisement

Advertisement

ரவி சாஸ்திரி புகழாரம்

அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் தனக்கு வீரேந்திர சேவாக்கை நினைவூட்டியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ரவி சாஸ்திரி - கோப்புப் படம்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த வடிவிலான போட்டிகளை எடுத்துக் கொண்டாலும், ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சாம் கொன்ஸ்டாஸ் போன்று அதிரடியாக யாரும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. சாம் கொன்ஸ்டாஸ் பும்ராவுக்கு எதிராக வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடினார். அவர் அதிரடியாக விளையாடத் தொடங்கியதும் இந்திய அணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களது எந்த ஒரு யுக்தியும் இளம் வீரரை தடுத்து நிறுத்த பலனளிக்கவில்லை.

சாம் கொன்ஸ்டாஸ் தொடக்கத்தில் ஒன்று இரண்டு ஷாட்டுகளை அடிக்கத் தவறியவுடன் இந்திய அணி வீரர்களின் முகத்தில் சிரிப்பினைக் காண முடிந்தது. இந்திய வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸின் விக்கெட்டினை சீக்கிரம் வீழ்த்தி விடலாம் என நினைத்தனர். ஆனால், அவர் அதிரடியாக விளையாடத் தொடங்கி பவுண்டரிகள் வரத் தொடங்கியதும் இந்திய அணி வீரர்களின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது.

வீரேந்தர் சேவாக் (கோப்புப் படம்)

இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் எனக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக்கை நினைவூட்டினார். வீரேந்திர சேவாக் விளையாடும்போது ஆட்டம் மிகவும் விறுப்பாக இருக்கும். அவர் ரசிகர்களை மகிழ்விப்பதற்கென பிறந்த வீரர். வீரேந்திர சேவாக்கின் அதிரடியான ஆட்டத்தை சாம் கொன்ஸ்டாஸிடம் பார்க்க முடிந்தது என்றார்.

அதிரடியாக விளையாடிய சாம் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments