FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மோசமான ஆட்டத்துக்காக தெ.ஆ. கேப்டனை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!

முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரமை கடுமையாக விமர்சித்துள்ளார்.

13 நவம்பர் 2024, 9:52 pm IST
மார்க்ரம். - படம்: எக்ஸ் / Proteas Men
பகிர்:

இந்தாண்டு டி20 போட்டியில் எய்டன் மார்க்ரம் மோசமாக விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பையிலும் சொதப்பலாகவே விளையாடினார்.

கடந்த 16 போட்டிகளில் 212 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 15.14 சராசரியுடன் 116.48 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார். இதில், அதிகபட்ச ரன் 46-ஆக இருக்கிறது.

4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவுடன் விளையாடி வருகிறார். தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

முன்னாள் தெ.ஆ. வீரர் கிப்ஸ், “நடப்பு டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகள் முன்னிலையில் இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால், கடைசி 2 போட்டிகள் அதிக ரன்கள் கொண்ட போட்டியாக மாறியுள்ளது. யார் வேண்டுமானாலும் தொடரை வெல்வார்கள் போலிருக்கிறது” என்றார்.

ரசிகர் ஒருவர் அடுத்த 2 போட்டிகளில் தெ.ஆ. டாப் 6 பேட்டர்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு கிப்ஸ் , “ மார்க்ரம் குளிர்பானங்களை எடுத்து செல்லலாம்” என வெளிப்படையாகக் கூறினார்.

கடந்த 2 போட்டிகளில் மார்க்ரம் 11 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

24 போட்டிகளில் 583 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 23ஆக இருக்கிறது. மீதமுள்ள போட்டிகளிலாவது மார்க்ரம் மீண்டு வருவாரா என தெ.ஆ. ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அடுத்து 2 டெஸ்ட் போட்டியில் இலங்கை உடன் தெ.ஆ. அணி விளையாடவிருக்கிறது. நவ.27இல் இந்தப் போட்டிகள் தொடங்குகின்றன.

தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 8.4 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்துள்ளது. சாம்சன் டக்கவுட் ஆக, அபிஷேக் சர்மா 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments