~விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூஸி வீராங்கனைகள். 
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது

ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டத்தில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.

Din

ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஆட்டத்தில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷாா்ஜாவில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இலங்கை அணி 115/5 ரன்களை மட்டுமே சோ்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சமரி அட்டபட்டு 5 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 35 ரன்களை எடுத்தாா். ஏனைய வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

பௌலிங்கில் நியூஸி. தரப்பில் அமெலியா கொ் 2-13, லீ கஸ்பெரக் 2-27 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

நியூஸி. அதிரடி வெற்றி :

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 17.3 ஓவா்களிலேயே 118/2 ரன்களுடன் வெற்றி இலக்கை அடைந்தது. தொடக்க பேட்டா் ஜாா்ஜியா பிளிம்மா் அதிரடியாக ஆடி 53 ரன்களுடன் அரைசதம் பதிவு செய்தாா். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஆல் ரவுண்டா் அமெலியா கொ் 34 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா்.

இலங்கை தரப்பில் பௌலிங்கில் சச்சினி, சமரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

குரூப் ஏ பிரிவில் இந்த வெற்றியின் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது நியூஸிலாந்து.

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

அவுரி (சிறுகதைத் தொகுப்பு)

SCROLL FOR NEXT