ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (செப்டம்பர் 11) தொடங்குகிறது. முதல் டி20 போட்டி நாளை சௌத்தாம்டனில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மூன்று அறிமுக வீரர்கள்
காயம் காரணமாக ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. பில் சால்ட் இங்கிலாந்து அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் ஜோர்டான் காக்ஸ், ஜாகோப் பெத்தெல் மற்றும் ஜேமி ஓவர்டான் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் காண்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவன்
பில் சால்ட், வில் ஜாக்ஸ், ஜோர்டான் காக்ஸ், லியம் லிவிங்ஸ்டன், ஜாகோப் பெத்தெல், சாம் கரண், ஜேமி ஓவர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாக்யூப் மஹ்முத் மற்றும் ரீஸ் டாப்ளே.