FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரிஷப் பந்த்தை அமைதியாக்க வேண்டும்: பாட் கம்மின்ஸ்

ரிஷப் பந்த் மிகுந்த தாக்கக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் எனவும், இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அவரை அமைதியாக்க வேண்டும் எனவும் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

24 செப்டம்பர் 2024, 5:56 pm IST
ரிஷப் பந்த் - படம் | ஐசிசி
பகிர்:

ரிஷப் பந்த் மிகுந்த தாக்கக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் எனவும், இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அவரை அமைதியாக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பை

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

ரிஷப் பந்த்தை அமைதியாக்க வேண்டும்

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ரிஷப் பந்த மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் எனவும், எதிர்வரும் தொடரில் அவரை அமைதியாக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோதும் ரிஷப் பந்த மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த முறை அவரை அமைதியாக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும். நம்ப முடியாத அளவுக்கு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடக் கூடியவர் ரிஷப் பந்த்.

ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் செல்லும் வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். எங்களது அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் அவ்வாறு இருக்கிறார்கள். இதுபோன்று அதிரடியாக விளையாடுபவர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக சிறிது நன்றாக பந்துவீசவில்லையென்றாலும், அவர்கள் எளிதில் ரன்கள் குவித்து ஆட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்றார்.

ரிஷப் பந்த்தின் பங்களிப்பு

கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய ரிஷப் பந்த், 12 இன்னிங்ஸ்களில் 624 ரன்கள் சேர்த்தார். அவரது சராசரி 62.40 ஆக இருந்தது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 159*. 2021 ஆம் ஆண்டு காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் குவித்த 89 ரன்கள், காபாவில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு தோல்வியைக் கொடுத்தது. இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடந்த 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா கடைசியாக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments