கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள்: 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!
ஆஸ்திரேலியாவின் அபாரமான வெற்றி குறித்து...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
கடைசி போட்டியில் ஆஸி. பேட்டிங் செய்து 420 ரன்கள் குவித்தது. ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் (142), மிட்செல் மார்ஷ் (100), கேமரூன் கிரீன் (118*) சதமடித்து அசத்தினார்கள்.
Advertisement
Advertisement
அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 24.5 ஓவரில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டெவால்டு பிரெவிஸ் 49 ரன்கள் எடுத்தார்.
ஆஸி. சார்பில் கானோலி 5, பிராட்லெட், அப்பாட் தலா 2, ஸாம்பா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
டி20 தொடரை ஆஸி. 2-1 என வெல்ல, ஒருநாள் தொடரில் 2-1 என தெ.ஆ. வென்றது.
Australia won the last ODI against South Africa by 276 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.