FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கோமாளி கோலி: மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழப்பு!

விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து சொதப்பினார்.

Updated On : 3 ஜனவரி 2025, 11:30 am IST
விராட் கோலி - படம்: ஏபி
பகிர்:

விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து சொதப்பினார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, பும்ரா அணியை வழிநடத்துகிறார்.

சிட்னியில் கடைசி டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருப்பார். ஆனால், நடுவர் தீர்ப்பினால் தப்பித்தார்.

Advertisement

Advertisement

பின்னர், ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. இளம் வீரர் கான்ஸ்டஸுடன் மோதியதால் கோலிக்கு ‘கோமாளி கோலி’ என ஆஸி. ஊடகங்கள் விமர்சித்தன. தற்போது, கோலி மீண்டும் அதே மாதிரி ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்களே கடுப்பாகி கோமாளி கோலி என கிண்டல் செய்து வருகிறார்கள்.

ரோஹித் சர்மா போல விராட் கோலியும் ஓய்வு எடுக்கலாம் என விமர்சித்து வருகிறார்கள்.

இந்திய அணி 66 ஓவர் முடிவில் 148/8 ரன்கள் எடுத்துள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments