FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

100-வது போட்டியில் சாதனை மழை! மிரட்டும் மிட்செல் ஸ்டார்க்!

மிட்செல் ஸ்டார்க் தன்னுடைய 100-வது படைத்துள்ள பல்வேறு சாதனைகள் பற்றி...

Updated On : 15 ஜூலை 2025, 1:03 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க். உடன் ஆஸ்திரேலிய அணியினர். - படம் | ஏபி
பகிர்:

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தன்னுடைய 100-வது போட்டியில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது. 194 ரன்கள் இலக்கை நோக்கிய ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 27 ரன்களில் சுருண்டு மோசமானத் தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் 7.3 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க், வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அதில், 4 மெய்டன்களும் அடங்கும். 

Advertisement

Advertisement

100 வது சர்வதேச போட்டியில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

400

இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதுவரை ஷேன் வார்னே, மெக்ராத் மற்றும் நாதன் லயன் ஆகியோர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

19064 பந்துகள்

19064 பந்துகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி, மிகக் குறைந்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் 16634 பந்துகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

2

முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர். முதலிடத்தில் இந்திய வீரர் இர்பான் பதான் 2006 ஆம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்த போட்டியில் முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

15 பந்துகள்

மிகக் குறைந்த(15 பந்துகள்) பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

  • எரின் டோஷாக் - 19 பந்துகள் (இந்தியாவுக்கு எதிராக)

  • ஸ்டூவர்ட் பிராட் - 19 பந்துகள் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)

  • ஸ்காட் போலண்ட் - 19 பந்துகள் (இங்கிலாந்துக்கு எதிராக)

4.3 ஓவர்கள்

மிகக் குறைந்த ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனை.

6 / 9

9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், 100-வது போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக, இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments