FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவது பற்றி...

Updated On : 12 மார்ச் 2025, 10:27 am IST
சென்னை சேப்பாக்கம் மைதானம். - ANI
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் முதல் போட்டிக்கான அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்னதாகவே, மறுவிற்பனை தளத்தில் ரூ. 1.23 லட்சம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயம் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னையில் நடைபெறும் இரண்டாவது போட்டியில், மார்ச் 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

Advertisement

படம்: viagogo website

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துவந்த நிலையில், இந்தாண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை - மும்பை விளையாடும் போட்டிக்கான டிக்கெட் அதிகாரப்பூர்வ தளத்தில் இன்னும் தொடங்காத இணையத்தில், பிரபல டிக்கெட் மறுவிற்பனை தளமான வியாகோகோவில் விற்பனை தொடங்கியுள்ளது.

கேஎம்கே லோயர் டிக்கெட் ரூ. 1,23,593-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 85,473-க்கு விற்பனையாகி வருகிறது. 12 வகையான விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் நிலையில், குறைந்தபட்ச விலையாக ரூ. 17,804 உள்ளது.

மைதானத்தின் கீழ் கேலரிக்கான டிக்கெட்டுகள் கடந்தாண்டைவிட 10 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சீசனில் டி கேலரியின் டிக்கெட் ரூ. 1,700-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.20,600-க்கு விற்கப்படுகிறது.

மேலும், சென்னை அணிகள் விளையாடும் போட்டிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மறுவிற்பனை தளத்தில் விற்கப்பட்டு வருகின்றது.

ஐபிஎல் டிக்கெட்டுகள் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே லட்சக்கணக்கான ரூபாயில் விற்பனையாகி வருவதால் சராசரி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments